மாவட்ட செய்திகள்

மாமியாரை கொன்ற மருமகள் கள்ளக்காதலனுடன் கைது + "||" + The daughter-in-law who killed her mother-in-law was arrested along with her fianc

மாமியாரை கொன்ற மருமகள் கள்ளக்காதலனுடன் கைது

மாமியாரை கொன்ற மருமகள் கள்ளக்காதலனுடன் கைது
மாமியாரை கல்லால் தாக்கி கொன்ற பெண் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை, 

மும்பை போரிவிலி மேற்கு கோராய் ரோடு பகுதியை சேர்ந்த பெண் ராதா(வயது28). இவர் தனது கணவர் மற்றும் மாமியார் சாலுபாய் (57) என்பவருடன் வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு தீபக் மானே என்பவர் அடிக்கடி வந்து சென்றார். இதனால் ராதாவிற்கும், தீபக் மானேவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

சம்பவத்தன்று அவர்கள் உல்லாசமாக இருந்த போது வெளியே சென்றிருந்த மாமியார் சாலுபாய் வீடு திரும்பினார். அப்போது அவர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர். இதனால் அவர்களது கள்ளத்தொடர்பு பற்றி தனது மகனிடம் தெரிவிக்கப்போவதாக சாலுபாய் கூறி உள்ளார்.

மாமியார் கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ராதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொல்ல முடிவு செய்தார். உடனே அங்கு கிடந்த கல்லால் தாக்கி அவரை கொலை செய்துவிட்டு 2 பேரும் தப்பி சென்று விட்டனர். வீட்டில் சாலுபாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராதா மற்றும் கள்ளக்காதலன் தீபக் மானே போரிவிலி மகாத்மாபுலே பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் வட்டியில்லாமல் கடன் தருவதாக ரூ.1½ கோடி மோசடி; 4 பேர் கைது
மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் வட்டியில்லாமல் கடன் தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது கொலை செய்ததாக 2 பேர் கைது
கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. அவரை கொலை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு: 3-வது மாடியில் இருந்து குதித்து நிதி நிறுவன அதிபர் தற்கொலை
சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி அளித்த வாக்குமூலத்தின்படி, விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிதி நிறுவன அதிபர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தற்கொலை செய்தார்.
4. வங்கி கணக்கில் இருந்து ரூ.47.60 லட்சம் மோசடி சென்னையில் அதிகாரி உள்பட 2 பேர் கைது
இறந்துபோன வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து நூதனமான முறையில் ரூ.47.60 லட்சம் பணத்தை மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. பெங்களூருவில், கூரியர் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் போதைப்பொருட்கள் சிக்கியது 4 பேர் கைது
பெங்களூருவில் கூரியர் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.