மருதுபாண்டியர் குருபூஜை விழா: பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி
மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவையொட்டி காளையார்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
காளையார்கோவில்,
சுதந்திர போராட்ட வீரர்களும் சிவகங்கை மாமன்னர்களுமான மருதுபாண்டியர்களின் 219-வது குருபூஜை விழா காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது. விழா கோவை காமாட்சிபுரி ஆதினம் தலைமையில் யாகபூஜையுடன் தொடங்கியது. ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து மருதுபாண்டியர் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து முதலில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜாக்குலின்அலெக்ஸ், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் நக்கீரன், ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டீபன்அருள்சாமி, மானாமதுரை வடக்கு ஒன்றிய செயலாளர் சிவசிவஸ்ரீதரன், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சம்மேளன தலைவர் முத்துக்குமார் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியசாமி, யோகாகிருஷ்ணகுமார், கென்னடி, கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் உமாதேவன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன்கென்னடி, மாநில இளைஞரணி செயலாளர் டேவிட்அண்ணாதுரை, மாவட்ட செயலாளர்கள் தேர்போகி பாண்டி (சிவகங்கை) , வ.து.ஆனந்த் (ராமநாதபுரம்), மாவட்ட பொருளாளர் அந்தோணிலாரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர் முருகேசுவரி சரவணன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பூவந்தி ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி விளக்குளம் பாக்கியம், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் பூவந்தி மணிகண்டன், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் சக்தி, மகேந்திரன், சுரேஷ்பாபு, நெப்போலியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் எம்.எல்.ஏ. கட்சியினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் தலைமையில் மணிவாசகம் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா. ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் முருகன் தலைமையில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் சுரேஷ், மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன், மேப்பல் சக்தி, மார்த்தாண்டன், ஒன்றிய தலைவர்கள் மயில்சாமி, பில்லப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழக தலைமை அகமுடையார் சங்கம் சார்பில் தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார், தென்மண்டல தலைவர் நாராயணமூர்த்தி, மாவட்ட தலைவர் முத்துவிஜயன், ஆலோசகர் சத்தியேந்திரன், இளைஞரணி தமோதரமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திப.சிதம்பரம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் மாங்குடி, மாவட்ட செயலாளர் சார்லஸ், வட்டார தலைவர் நாகராஜ், மகளிரணி ஸ்ரீவித்யாகணபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில் காளையார்கோவில் பங்குத்தந்தை சூசைஆரோக்கியம் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். விழாவையொட்டி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் தலைமையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிவகங்கை ஆர்.டி.ஓ. முத்துகழுவன் தலைமையில் வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story