திருச்செந்தூர்-விளாத்திகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூர்-விளாத்திகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2020 10:15 PM GMT (Updated: 28 Oct 2020 5:46 PM GMT)

திருச்செந்தூர், விளாத்திகுளத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்செந்தூர்,

ஓ.பி.சி. மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் ராஜ்குமார், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், நகர செயலாளர்கள் மாணிக்கம், பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய பொருளாளர் பால்வனவளவன், ஒன்றிய துணை செயலாளர்கள் ஆத்திசாமி, கனித்துரை, சமூக நல்லிணக்க பேரவைமாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் சேதுராமன், செய்தி தொடர்பு மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகநயினார் உட்பட 30 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாலுகா அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் வில்லாளன் ரெஸ்லி தலைமை வகித்தார். விளாத்திகுளம் நகர செயலாளர் அழகு முனியசாமி, புதூர் நகர செயலாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களுக்கு நிகழாண்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என தெரிவித்து நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை கண்டித்தும், மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பரமசிவன், பெரியசாமி, விஜயன், ரமேஷ், சவேரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story