தென்காசி, சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தென்காசி, சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2020 10:30 PM GMT (Updated: 2020-10-29T00:46:15+05:30)

தென்காசி, சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தென்காசி,

மருத்துவ கல்வியில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணை செயலாளர் (நில உரிமை மீட்பு பிரிவு) துரை அரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், துணைச் செயலாளர் ஏ.எம். சித்திக், மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன், சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வம், வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் இசக்கி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளஞ்சிறுத்தை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் வீராச்சாமி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கடையநல்லூர் தொகுதி செயலாளர் ஜான் தாமஸ், வடக்கு மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன், தென்காசி நகர செயலாளர் ஹக்கீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதேபோல் சங்கரன்கோவில் தேரடி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி காசி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் பீர்மைதீன், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராஜ், நகர செயலாளர் திருமாசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் குழந்தை வள்ளுவன், குட்டிவளவன், அன்புகனி, முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை சங்கரன்கோவில் டவுன் போலீசார் கைது செய்தனர்.

Next Story