மாவட்ட செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை + "||" + Bank employee commits suicide after losing money in online gambling

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பூர், 

விழுப்புரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலை செய்து வந்தார். இவர் மற்றும் இவரது நண்பர்கள் சென்னை பெரம்பூர் சீனிவாசா தெருவில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தனர்.

ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் உடன் தங்கியிருந்த நண்பர்கள் ஊருக்குச் சென்று விட்டனர். குமரேசன் மட்டும் அறையில் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் மாலை ஊருக்குச் சென்றிருந்த நண்பர்கள் சென்னை திரும்பி வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது தங்களது அறையில் குமரேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்பியம் போலீசார் குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தற்கொலை செய்து கொண்ட குமரேசன், ஓய்வுநேரத்தில் செல்போனில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

ஆன்லைன் சூதாட்டம்

இதனால் நண்பர்களிடமும், தனது தம்பி மற்றும் உறவினர்களிடமும் கடன் வாங்கி சூதாடியதுடன், சம்பள பணத்தையும் வீட்டிற்கு அனுப்பாமல் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குமரேசன், அறையில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார்? என்பது விசாரணைக்கு பிறகு தெரிய வரும் எனவும் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை அருகே நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்: போலீசார் முன்னிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை
மகனை விசாரணைக்காக அழைத்து சென்றதை தடுத்தபோது தாக்கியதால் போலீசார் முன்னிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. சாத்தான்குளம் பகுதியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை
சாத்தான்குளம் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
3. விவசாயத்தில் தொடர் நஷ்டம்: திருச்சியில் தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை
விவசாயத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து திருச்சியில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
4. கணவரை பிரிந்து வசித்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை பெண் உள்பட 3 பேரிடம் விசாரணை
தையல்கடைக்காரருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி கொடுமைப்படுத்தியதால், கணவரை பிரிந்து வசித்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. வேறொருவருடன் திருமணம் செய்து வைத்ததால் காதலனுடன் புதுப்பெண் குளத்தில் குதித்து தற்கொலை
பங்காருபேட்டை அருகே வேறொருவருடன் திருமணம் செய்து வைத்ததால் மனவேதனை அடைந்த புதுப்பெண், காதலனுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.