புனேயில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை


புனேயில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Oct 2020 2:28 AM IST (Updated: 30 Oct 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனே,

புனே சட்டக்கல்லூரி ரோடு பகுதியில் மருந்து வியாபாரம் செய்து வந்தவர் ஜெயந்த் ராஜ்புத் (வயது54) . இவரது மனைவி புனே காங்கிரஸ் கட்சி பிரமுகரும், முன்னாள் கவுன்சிலரும் ஆவார். ஜெயந்த் ராஜ்புத் தினமும் மாலை 6 மணி அளவில் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி வரையில் வீட்டிற்கு வரவில்லை. மேலும் அவரது செல்போனிற்கு தொடர்பு கொள்ள முயன்ற போது முடியாமல் போனது.

இதனால் அவரது மகன் தந்தையை தேடி அவரது அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர் தனது அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருந்தது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்த டெக்கான் ஜிம்கானா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு நடத்திய சோதனையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. இதில் தனக்கு 2 பேர் பணம் கேட்டு தொந்திரவு செய்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story