பெரம்பலூர் மாவட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு மானிய வழங்க கோரி மனு
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், சங்கத்தின் மாநில செயலாளர் அருளானந்தம் தலைமையில் வந்து மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனிடம், ஒரு மனு அளித்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், சங்கத்தின் மாநில செயலாளர் அருளானந்தம் தலைமையில் வந்து மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனிடம், ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-
கறிக்கோழி வளர்ப்பிற்கான தொகை குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் நபார்டு மானிய உதவி 112 பேருக்கு வழங்கப்படவில்லை. அதனை பெற்றுத்தர வேண்டும். பாரபட்சமின்றி அனைத்து பண்ணைகளுக்கும் கோழிக்குஞ்சுகள் வழங்க வேண்டும். பண்ணையில் ஏற்படும் பிரச்சினைகளை கலெக்டரிடம் தெரிவித்து பிரச்சினைகளை தீர்க்க மாதம் ஒருமுறை கலெக்டரின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்த ஆவண செய்ய வேண்டும். நிரந்தர ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். இந்த மனுவின் மீது தீர்வு காணப்படவில்லை என்றால், வருகிற 5-ந் தேதி முதல் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு அளிக்கப்பட்டபோது கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட பொருளாளர் அழகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story