ரூ.4½ கோடியில் உள் விளையாட்டரங்க கட்டுமான பணிகள் தீவிரம் ஜனவரியில் பயன்பாட்டிற்கு வருகிறது
புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட் டரங்கத்தில் ரூ.4½ கோடியில் உள் விளையாட்டரங்கம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்ட ரங்கம் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் கூடைப்பந்து, கைப்பந்து விளையாடுவதற்கு தனி இடமும், நீச்சல் குளமும் தனியாக அமைந்துள்ளது. மேலும் தடகள போட்டிகள் நடைபெற, கால்பந்து போட்டி நடைபெற மைதானம் உள்ளது. பார்வையாளர்கள் அமர கேலரியும், பொதுமக்கள் நடைபயிற்சி மேற் கொள்ள மைதானத்தை சுற்றி நடைபாதையும் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட விளையாட்டரங் கத்தின் வளாகத்தின் கடைசி பகுதியில் உள் விளையாட்டரங்கம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கின் காரணமாக கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின் தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜனவரியில்...
உள் விளையாட்டரங்கத்தில் மேற்கூரைகள் அமைப்பதற்காக ராட்சத இரும்பு கம்பிகள் வந்து இறங்கி உள்ளன. இதனை பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இதேபோல உள் விளையாட் டரங்கத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்திலும் கட்டுமான பணி நடைபெறு கிறது. உள்விளையாட்டரங்கத்தின் வெளிப்புறப் பகுதியில் கட்டிட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த பணிகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், உள் விளையாட்டரங்க பணி ரூ.4 கோடியே 62 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் இந்த உள்விளையாட்டரங்கம் பயன்பாட்டிற்கு வரும். இங்கு, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து உள்ளிட்டவை விளையாட வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.
Related Tags :
Next Story