பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - பெங்களூருவை சேர்ந்த வாலிபர் கைது
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் மினிவேனில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அணைக்கட்டு,
பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபலட்சுமி. சப்-இன்ஸ்பெக்டர் சி.ரவி மற்றும் போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பெங்களூருவில் இருந்து வேலூரை நோக்கி செல்ல மினி வேன் ஒன்று சுங்கச்சாவடியில் வந்து நின்றது. சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் மினி வேனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். வேனில், துணி மூட்டைக்குள் 700 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம். பின்னர் போலீசார் வேனுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், பெங்களூரு சிங்குசந்திரா பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஒலி ராஜ் (வயசு 24) என்பதும், பெங்களூருவில் இருந்து சென்னை மாதவரம் பகுதிக்கு குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒலிராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story