காவேரிப்பாக்கம் அருகே, புதுமாப்பிள்ளை திடீர் சாவு - காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்


காவேரிப்பாக்கம் அருகே, புதுமாப்பிள்ளை திடீர் சாவு - காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 30 Oct 2020 5:30 PM IST (Updated: 30 Oct 2020 4:50 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் அருகே புதுமாப்பிள்ளை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காவேரிப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் பள்ளத்தெரு பகுதியை சேர்ந்தவர் சக்திகுமார் (வயது 28), கூலித் தொழிலாளி. இவருக்கும் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள ஏசூர் பகுதியைச் சேர்ந்த செல்வி (25) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று காலை சக்திகுமார் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதிக்கு கூலி வேலைக்கு வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story