மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மேலக்கால் ஊராட்சி மன்ற தலைவர் போராட்டம் - பணியை செய்யவிடாமல் வார்டு உறுப்பினர்கள் தடுப்பதாக புகார்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மேலக்கால் ஊராட்சி மன்ற தலைவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சோழவந்தான்,
மதுரை மாவட்டம் மேலக்கால் ஊராட்சி மன்ற தலைவரான முருகேஸ்வரி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, ஊராட்சி மன்ற பணிகளை செய்ய விடாமல் வார்டு உறுப்பினர்கள் தடுக்கின்றனர். ஜாதி பெயரை சொல்லி வார்டு உறுப்பினர்கள் திட்டுவதுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பதாகவும், மேலும் ஊராட்சி மன்றம் சார்பில் கொண்டு வரப்படும் தீர்மானங்களில் கையெழுத்திட மறுப்பதால் மக்களுக்கான பணிகள் நடைபெறாமல் உள்ளன என புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில், நேற்று மேலக்கால் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி, எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வார்டு உறுப்பினர்கள் முனியம்மாள், தமிழ்ச்செல்வி, பாண்டியம்மாள், ராதா, கதிரவன், காசிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி எங்கள் மீது வேண்டுமென்றே பொய் புகார் தெரிவித்துள்ளதாகவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினர்.
Related Tags :
Next Story