மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே 1,200 கிலோ மஞ்சள் பறிமுதல் + "||" + 1,200 kg of turmeric seized near Thoothukudi

தூத்துக்குடி அருகே 1,200 கிலோ மஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடி அருகே 1,200 கிலோ மஞ்சள் பறிமுதல்
தூத்துக்குடி அருகே 1,200 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி,

இலங்கையில் கடந்த சமீபகாலமாக மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு லாரி செட்டில் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிப்காட் போலீசார் சோரீஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு லாரி புக்கிங் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் 24 மூட்டைகளில் மொத்தம் சுமார் 1,200 கிலோ மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

உடனடியாக போலீசார் அந்த மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மஞ்சள் மூட்டைகளை அதே அறையில் வைத்து பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல்
கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி அளிக்கப்படும் என ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. 1,000 இடங்களில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள்: தர்மேந்திர பிரதான் தகவல்
1,000 இடங்களில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
4. 1,301 வாக்குச்சாவடி மையங்கள் வரைவு பட்டியலை வெளியிட்டு கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் 1,301 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதாக வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டு தெரிவித்தார்.
5. சிவகாசியில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 1,279 பண்டல் பட்டாசுகள் பறிமுதல் - போலீசார் சோதனையில் சிக்கியது
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 1,279 பண்டல் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.