கரூர் மாவட்ட புதிய கலெக்டராக மலர்விழி பொறுப்பேற்பு


கரூர் மாவட்ட புதிய கலெக்டராக மலர்விழி பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 31 Oct 2020 3:30 AM IST (Updated: 31 Oct 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட புதிய கலெக்டராக மலர்விழி பொறுப்பேற்றுக் கொண்டார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த அன்பழகன் மதுரை மாவட்ட கலெக்டராகவும், தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட கலெக்டராகவும் தமிழக அரசு நியமித்தது. இதனையடுத்து கரூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக மலர்விழி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மலர்விழி 2001-ம் ஆண்டில் குரூப்-1 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்தார். 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை விருதுநகர் மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றினார்.

2009-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அலுவலராக பதவி உயர்வு பெற்றார். 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை வணிக வரித்துறையின் இணை ஆணையராகப் பணியாற்றினார். 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சிவகங்கை மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றினார். 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். தற்போது கரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து புதிய கலெக்டருக்கு அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story