ராணிப்பேட்டையில், மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது - 4 வாகனங்கள் பறிமுதல்


ராணிப்பேட்டையில், மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது - 4 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 Oct 2020 8:45 AM IST (Updated: 31 Oct 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து 4 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டை பாரி காலனியை சேர்ந்தவர் திப்புசுல்தான் (வயது 29). இவர் ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் தள்ளுவண்டிகளை பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று திப்புசுல்தான் தனது கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் சிப்காட்டை அடுத்த, புளியந்தாங்கல் பகுதியை சேர்ந்த முருகன் (25), பொன்னம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (28) ஆகிய இருவரும் திப்புசுல்தானின் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு ஓட முயன்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றபோது, முருகன் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் பிடிக்க முயன்றவர்களை அசிங்கமாவும்திட்டி உள்ளனர். ஆனாலும் இருவரையும் பொதுமக்கள் பிடித்து ராணிப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இருவரிடமும் விசாரணை செய்தபோது, அவர்கள் இருவரும் ராணிப்பேட்டை, சிப்காட், திமிரி ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முருகன், வெங்கடேசன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story