சிக்கமகளூருவில் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் கொரோனாவுக்கு பலி


சிக்கமகளூருவில் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 1 Nov 2020 4:00 AM IST (Updated: 31 Oct 2020 11:47 PM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை சிக்கமகளூரு மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு வார்டில் தனலட்சுமி(வயது 43) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் கடந்த 7 மாதங்களாக அவர் கொரோனா நோயாளிகள் வார்டில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனலட்சுமிக்கு உடநலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் தனலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவரை டாக்டர்கள் சிக்கமகளூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று தனலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுகாதார துறை ஊழியர்கள் அடக்கம் செய்தனர்.


Next Story