அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மீது வழக்கு


அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 1 Nov 2020 5:50 AM IST (Updated: 1 Nov 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கூட்டு குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி, 

அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கூட்டு குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் யோகராஜ் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். தீபாவளி முன்பணம், போனஸ் உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக யோகராஜ் (50) உள்பட 5 பேர் மீது அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Next Story