மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த வெற்றி


மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த வெற்றி
x
தினத்தந்தி 1 Nov 2020 1:27 AM GMT (Updated: 1 Nov 2020 1:27 AM GMT)

மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த வெற்றி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா அறிக்கை.

நெல்லை, 

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஒப்புதலை கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடந்த ஒன்றரை மாதமாக கவர்னரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று நேரில் வலியுறுத்தினர். இருந்தபோதும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு நிறைவேற்றியாக வேண்டும் என்ற ராஜ தந்திரத்தோடு மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கிராமத்தில் அரசுப்பள்ளியில் எடப்பாடி பழனிசாமி படித்ததால் கிராமப்புற மாணவர்களின் நிலை முதல்-அமைச்சருக்கு தெரியும் என்று அனைத்துக் கட்சியினரும் பாராட்டினர். மேலும் இந்த அரசாணையை தி.மு.க. தலைவர் ஸ்டாலினே பாராட்டினார்.

இந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். கவர்னரின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். இதன் மூலம் அரசு பள்ளியில் படித்த 303 மாணவர்கள் பயனடைவார்கள். இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story