நெல்லையில் அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்கள் மற்றும் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சமய நல்லிணக்க மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை,
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்கள் மற்றும் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சமய நல்லிணக்க மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் காஜா மொய்னுதீன், பாலபிரஜாபதி அடிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
பழங்குடி இன மக்களின் உரிமைக்காக போராடிய ஸ்டேன் சுவாமி உள்ளிட்ட 16 மனித உரிமை ஆர்வலர்களின் சட்டவிரோத கைதை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் அறவழியில் போராட்டம் நடத்திய சிறுபான்மை மக்களின் மீது தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலை கண்டித்தும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலுள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நெல்லை உடையார்பட்டியில் கிறிஸ்தவ கல்லறைகளை சேதப்படுத்திய சம்பவத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், பகுதி செயலாளர் மணப்படை மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட சிறுபான்மை நலக்குழு தலைவர் பழனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான் முகைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அலிப் பிலால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஆயர் அந்தோணிசாமி, தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் நிஜாம் உள்பட 16 பேரும் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story