வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்


வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2020 8:39 AM IST (Updated: 1 Nov 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூரில் காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் ஏர்கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நூல் ராட்டை சுற்றி ஏர் கலப்பையுடன் நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அன்புவீரமணி முன்னிலை வகித்தார். அப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் திருத்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நூல் ராட்டை சுற்றி ஏர் கலப்பையுடன் நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல், வட்டார தலைவர்கள் ஜெயபால், செல்வராஜ், வடுகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story