மாவட்டத்தில், கொரோனாவுக்கு 145 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 114 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 145 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 56 பேர், ஓமலூரில் 11 பேர், மேச்சேரி, மேட்டூர், சேலம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், எடப்பாடியில் 6 பேர், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், தாரமங்கலத்தில் 3 பேர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, சங்ககிரி, கெங்கவல்லி, தலைவாசல், வாழப்பாடி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், கொளத்தூர், கொங்கணாபுரம், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 9 பேர், தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 5 பேர், ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 4 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வந்த 3 பேர், சென்னையில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 179 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story