அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
கமுதி பசும்பொன்னுக்கு வருகை தந்த முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கமுதி,
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டியில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், முன்னாள் மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் யூனியன் தலைவருமான தர்மர், கமுதி ஒன்றிய செயலாளரும், கமுதி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்க சேர்மன் எஸ்.பி.காளிமுத்து, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட பொருளாளரும், கமுதி ஊராட்சி ஒன்றிய ஊராட்சி கூட்டமைப்பு தலைவருமான எருமகுளம் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் கழக மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, புரட்சித்தலைவி பசுமை தமிழகம் தலைவர் வி.என்.சுந்தர்ராஜன், தென்னாடு மக்கள் கட்சி தலைவர் கணேச தேவர், கமுதி ஒன்றிய அவைத் தலைவர் பம்மனேந்தல் சேகரன், கமுதி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருமலையான், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் பசும்பொன் தமிழ்வாணன், அபிராமம் அம்மா பேரவை செயலாளர் சாதிக், ஊராட்சி மன்ற தலைவர்கள் முதல்நாடு காசிநாதன், துணைத் தலைவர் பாலமுருகன், பம்மனேந்தல் சசிகலா கருப்பசாமி பாண்டியன், பொந்தம்புளி ஆறுமுகம், எருமகுளம் பெரியசாமித் தேவர், துணைத் தலைவர் மணிகண்டன், முஷ்டக்குறிச்சி பரமேஸ்வரி பாலமுருகன், ராமசாமிபட்டி சோலை சேதுபதி, முத்துலட்சுமி சேதுபதி, செங்கற்படை ராமு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் கீழராமநதி சோலை ஆழ்வார், மேலமுடிமன்னார் கோட்டை கருப்பசாமி, கே.வேப்பங்குளம் அம்மாபொண்ணு மாரிமுத்து, செயலாளர் வக்கீல் ராமகிருஷ்ணன், எம்.புதுக்குளம் மாரியம்மாள் வில்வதுரை, திம்மநாதபுரம் கருமலையான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பூங்கொடி, பம்மனேந்தல் சேகரன் கருப்பசாமி பாண்டியன், துணைத் தலைவர் கனகராஜ், ராமசாமிபட்டி சோலை சேதுபதி, புத்துருத்தி நாகராஜன், டி.புனவாசல் கர்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கருப்பசாமி பாண்டியன், சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட தலைவர் பாரதி கண்ணன், கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவர் முதுகுளத்தூர் சங்கர பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் அம்மா சரவணன், கமுதி யூனியன் கவுன்சிலர் பேரையூர் அன்பரசு, கமுதி நகர் பேரவை செயலாளர் டேவிட் பிரதாப்சிங், அபிராமம் நகர் பேரவை துணைச் செயலாளர் ஆதிலிங்கம், அபிராமம் நகர் இளைஞரணி செயலாளர் வீரபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பரமக்குடி நாகராஜன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சின்னாண்டு தேவன், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தோப்படைபட்டி பூமிநாதன் உள்பட கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆணை சேரி கே.முத்துராமலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் எஸ். கதிரேசன், ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி. செந்தில்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் கோவிந்தராமு, உயர்நீதிமன்ற கூடுதல் அரசு வக்கீல் கிடாத்திருக்கை முனியசாமி, கீரனூர் ஊராட்சி தலைவர் ஜோதி முனியசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் கொல்லங்குளம் வடிவேல், அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் மாறன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.
தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், உதவி கலெக்டர் பிரதிப்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், யூனியன் ஆணையாளர்கள் தங்கபாண்டியன், அண்ணாதுரை, பரமக்குடி ஆர்.டி.ஓ. தங்கவேலு, தாசில்தார் செண்பக லதா, சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாடசாமி சுந்தர்ராஜ், கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி உள்பட அதிகாரிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story