விழுப்புரம், திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
விழுப்புரம், திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
இந்திய ஏழை விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடிமைகளாக்கி விவசாய நிலங்களை அபகரிக்கும் வேளாண் மசோதாக்களை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே சத்தியாகிரக அறவழி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கினார். அகில இந்திய உறுப்பினர்கள் சிறுவை ராமமூர்த்தி, ரங்கபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாநில ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாநில இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் விஜயரங்கன், ராஜ்குமார், நாராயணசாமி, குப்பன், சேவாதள மாவட்ட தலைவர் ராஜேஷ், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் அப்துல்ஹக்கீம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், செய்தி தொடர்பாளர் அகமது, வட்டார தலைவர்கள் காசிநாதன், காமராஜ், ரவி, வெங்கடேசன், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஸ்ரீராம், துணைத்தலைவர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் விசுவநாதன் நன்றி கூறினார். முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 36-வது நினைவு தினத்தை விவசாயிகளின் உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டது.
இதேபோல் மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திண்டிவனம் வ.உ.சி திடலில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.ரமேஷ் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர தலைவர் விநாயகம், விக்கிரவாண்டி நகர தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் வரவேற்றார்.
வட்டார தலைவர்கள் காத்தவராயன், ஜனார்த்தனம், சுப்பிரமணி, மெடிக்கல் செல்வம், இளவழகன், தேவசகாயம், புவனேஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் அர்ஜுனன், இருதயராஜ், குமரேசன், எஸ்.சி.துறை, மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வெங்கட், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வரதராஜ், மகிளா காங்கிரஸ் லட்சுமி, நகர செயலாளர் பொன் ராஜா, வக்கீல் அஜிஸ், பொன்னுசாமி, பலராமன், கலிவரதன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராகவும் மோடி அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் நகர துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story