கரூர் மாவட்டத்தில், புதிதாக 19 பேருக்கு கொரோனா நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றால் பொதுமக்கள் அச்சம்


கரூர் மாவட்டத்தில், புதிதாக 19 பேருக்கு கொரோனா நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 2 Nov 2020 5:10 AM IST (Updated: 2 Nov 2020 5:10 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கரூர், 

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் நோய் தொற்று குறைந்ததால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பி வந்துள்ளனர். இதில், கரூர் மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 24 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

19 பேருக்கு தொற்று

இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கரூர் மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய 2 பெண்கள், 58 வயது ஆண், கடம்பன்குறிச்சியை சேர்ந்த 68 வயது மூதாட்டி, சின்னகுளத்து பாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர், புலியூரை சேர்ந்த 35 வயது வாலிபர், மண்மங்கலத்தை சேர்ந்த 54 வயது ஆண், வடக்கு பாளையத்தை சேர்ந்த 27 வயது பெண், பள்ளப்பட்டியை சேர்ந்த 47 வயது ஆண்.

தோகைமலையை சேர்ந்த 28 வயது வாலிபர், கவுரிபுரத்தை சேர்ந்த 44 வயது பெண், செங்குந்தபுரத்தைச் சேர்ந்த 52 வயது ஆண், வெங்கமேட்டை சேர்ந்த 25 வயது பெண், தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது மூதாட்டி, கடவூரை சேர்ந்த 48 வயது ஆண் உள்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story