ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்


ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 2 Nov 2020 3:22 AM GMT (Updated: 2 Nov 2020 3:22 AM GMT)

ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி,

ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டி புதூரில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் மற்றும் கிளை தொடக்க விழா நடந்தது. இதற்கு மாநில துணை தலைவர் தோப்பைய கவுண்டர் தலைமை தாங்கினார். கிளை தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். கிளை செயலாளர் பெருமாள், துணை தலைவர் சண்முகம், துணை செயலாளர் தங்கராஜ், பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் கலந்து கொண்டு சங்க கொடி ஏற்றி பேசினார். இதில் மாவட்ட செயலாளர் ராஜா, பொதுச் செயலாளர் சுந்தரேசன், இளைஞரணி செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் ராஜமாணிக்கம், சண்முகம், முத்து, கோவிந்தன், ராஜா, சக்தி, கோவிந்தசாமி, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணாதுரை நன்றி கூறினார்.

ஒப்புதல் வழங்க வேண்டும்

கூட்டத்தில் பாம்பாறு அணையில் இருந்து கொண்டம்பட்டி புதூர் வழியாக அரூர்-ஊத்தங்கரை இடையிலான நெடுஞ்சாலையுடன் இணைக்கும் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஊராட்சி சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதில் அரை கிலோ மீட்டர் சாலை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் இதை சீரமைக்க வனத்துறை ஒப்புதல் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் இந்த சாலையை வனத்துறையிடம் ஒப்புதல் பெற்று சீரமைக்க வேண்டும்.

புதூர் கிராமத்திற்கு முறையாக குடிநீர் வினியோகிக்க வேண்டும். இமாம் சாய்பு ஏரி, நடுகுட்டை ஏரி, இஞ்சிகுட்டை ஏரி, புதூர் ஏரி, ஒன்னகரை ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஏரிக்கரைகளின் மீது டிராக்டர்கள், விவசாய வாகனம் சென்று வர சாலை அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story