சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா


சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
x
தினத்தந்தி 2 Nov 2020 10:31 AM IST (Updated: 2 Nov 2020 10:31 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி சிங்கம்புணரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிங்கம்புணரி, 

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதங்களில் வரும் பவுர்ணமியை யொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்திற்குட்பட்ட திருக்கொடுங்குன்ற நாதர் கோவிலில் உள்ள சிவனுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து அன்னாபிஷேக விழாவில் சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அதிகாரி கேசவன் மற்றும் அன்னாபிஷேக விழாக்குழுவினர்கள் செந்தில், கணேசன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சிங்கம்புணரியை அடுத்த அரளிப்பாறை குகை அண்ணாமலையார் கோவிலில் பவுர்ணமியை யொட்டி அன்னாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக சிவபெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அன்னதான பிரசாதம்

அதனைத்தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து அன்னத்தால் மூடி மலர்கள் சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப் பட்டது. இதேபோல் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட சிங்கம்புணரியை அடுத்த சிவபுரிபட்டி யில் உள்ள தர்மஸம் வர்த்தினி உடனுறை தான் தோன்றீஸ்வரர் கோவில் மற்றும் முறையூரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. சிவபுரிபட்டி கோவிலில் ரவி குருக்கள் தலைமையில் சிவபெருமானுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து லிங்கத்தில் அன்னம் வைத்து மலர் மாலை சூடி வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் முறையூர் கோவிலில் சுரேஷ் குருக்கள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story