135 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,500-க்கு கீழ் குறைந்தது
தமிழகத்தில் 135 நாட்களுக்கு பின்னர், கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 500-க்கு கீழ் குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 68 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,453 ஆண்கள், 1,028 பெண்கள் என மொத்தம் 2,481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 74 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 446 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 671 பேரும், கோவையில் 243 பேரும், திருப்பூரில் 146 பேரும், செங்கல்பட்டில் 136 பேரும், சேலத்தில் 125 பேரும், திருவள்ளூரில் 115 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூர், தென்காசியில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 99 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 507 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 252 ஆண்களும், 2 லட்சத்து 89 ஆயிரத்து 223 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 32 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 26 ஆயிரம் குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 90 ஆயிரத்து 157 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
31 பேர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனையில் 21 பேரும் என 31 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 9 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், கோவையில் 5 பேரும், காஞ்சீபுரத்தில் 3 பேரும், சேலத்தில் 2 பேரும், ஈரோடு, கன்னியாக்குமரி, மதுரை, திருவள்ளூர், வேலூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 11 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 11,183 பேர் உயிரிழந்துள்ளனர்.
3,940 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனா பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 940 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,238 பேரும், கோவையில் 652 பேரும், சேலத்தில் 238 பேரும், திருவள்ளூரில் 152 பேரும், செங்கல்பட்டில் 150 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 19 ஆயிரத்து 504 பேர் உள்ளனர்.தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 925 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 982 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 342 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், 135 நாட்களுக்கு பின்னர் நேற்று கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 500-க்கும் கீழ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story