செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்தை நெருங்குகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை நெருங்குகிறது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 683 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 43 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படப்பை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஆண், ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 911 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 393 உயர்ந்தது. 387 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 115 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 36 ஆயிரத்து 572 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக உள்ளது. 924 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story