எடப்பாடி அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்


எடப்பாடி அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 4 Nov 2020 5:10 AM GMT (Updated: 4 Nov 2020 5:10 AM GMT)

எடப்பாடி அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

எடப்பாடி, 

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த மெய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருப்பாளியை சேர்ந்த ஒருவர் பணிபுரிகிறார்.

இவர் பள்ளிக்கு மது போதையில் வந்து மாணவர்களிடம் சென்று கராத்தே கற்றுத்தருவதாக கூறி அடித்து உதைத்துள்ளார். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தொடக்க கல்வி அலுவலர் சரோஜாவுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர் எடப்பாடி போலீசில் புகார் தெரிவித்தார்.

இடைநீக்கம்

இதன்பேரில் எடப்பாடி போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்து விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் தொடக்க கல்வி அலுவலர் சரோஜா, வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் மதுபோதையில் வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Next Story