சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி 97 பேருக்கு தொற்று உறுதி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 125 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவின் பாதிப்பு 97 ஆக குறைந்துள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 48 பேர், ஓமலூரில் 5 பேர், அயோத்தியாப்பட்டணம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், சங்ககிரி, சேலம் ஒன்றியம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், வாழப்பாடி, கொளத்தூர், எடப்பாடி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
திருச்சி, ஈரோட்டில் இருந்து சேலம் வந்த தலா 6 பேர், நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 3 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் சேலத்தை சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பலியானார்.
இதேபோல் 55 வயதுடைய ஆண் ஒருவரும், 85 வயதுடைய முதியவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர். மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 172 பேர் குணமடைந்துவிட்டதால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story