உடுமலையில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


உடுமலையில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2020 11:37 AM IST (Updated: 4 Nov 2020 11:37 AM IST)
t-max-icont-min-icon

போனஸ் குறைக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக உடுமலை கிளை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு, எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

உடுமலை, 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு முன்பு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு தீபாவளி போனஸ் 10 சதவீதம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. போனஸ் குறைக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக உடுமலை கிளை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு, எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. சங்க மண்டல துணைச்செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். எல்.பி.எப் மண்டல துணைச்செயலாளர் ஜி.மணி, ஏ.ஐ.டி.யு.சி. சங்க மண்டலத்துணைத்தலைவர் நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story