திண்டிவனம் அருகே பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் எரிசாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் மீது வழக்குப்பதிவு
திண்டிவனம் அருகே பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம், மதுபாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே மேல்பாதி கிராம எல்லையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதா கிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, காமராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு மேல்பாதி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து, சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 507 பிளாஸ்டிக் கேன்களில் 18 ஆயிரத்து 158 லிட்டர் எரிசாராயமும், 20 அட்டை பெட்டிகளில் 960 மதுபாட்டில்களும் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அங்கு யாரும் இல்லை.
இதையடுத்து போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், ஒலக்கூரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு என்பவர், அந்த பண்ணை வீட்டை குத்தகைக்கு எடுத்து இருந்ததும், மேலும் அந்த பண்ணை வீட்டில் ஓங்கூரை சேர்ந்த முரளி(வயது 30), வெங்கந்தூரை சேர்ந்த முருகன்(35) ஆகியோர் புதுச்சேரியில் இருந்து எரி சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராய கேன்கள், 960 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எரிசாராயம், மதுபாட்டில்களை பதுக்கி வைத்ததாக முரளி, முருகன் ஆகியோரை வலைவீசி தேடி வருவதோடு, இந்த சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டிவனம் அருகே பண்ணை வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story