கர்நாடகத்துக்கு ஓட்டம்பிடித்த கள்ளக்காதலர்கள் போலீசார் மீட்டு அழைத்து வந்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்
கர்நாடகத்துக்கு ஓட்டம்பிடித்த கள்ளக்காதலர்களை செல்போன் மூலம் இருப்பிடத்தை அறிந்து போலீசார் மீட்டு அழைத்து வந்தனர். அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவடி ஊராட்சி குன்னத்தூர் அருகே உள்ள அனுமம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 32). இவர் குன்னத்தூர் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். பொன்னேரி பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் தொழிலாளியின் மனைவி பரிமளா (30). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் பரிமளா தனது தாய்வீடான அனுமம்பட்டிக்கு அவ்வப்போது சென்று வரும்போது செந்திலுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் செந்திலும், பரிமளாவும் தங்கள் குழந்தைகளை தவிக்க விட்டு வெளியேறினார்கள். அதன்பின் இருவரும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து செந்திலின் மனைவி தனது கணவரை காணவில்லை எனவும் பரிமளாவின் கணவர் தனது மனைவியை காணவில்லை எனவும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் செந்தில் மற்றும் பரிமளாவின் செல்போன் எண்களை வைத்து ‘டவர் லொகேஷன்’ மூலம் ஆய்வு செய்ததில் அவர்கள் கர்நாடக மாநில பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் கண்டுபிடித்து நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு போலீசார் இருதரப்பு குடும்பத்தினரையும் வரவழைத்து செந்திலுக்கும் பரிமளாவுக்கும் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story