நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 80 பேருக்கு கொரோனா


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 80 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Nov 2020 3:30 AM IST (Updated: 4 Nov 2020 11:36 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மேலும் 80 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 931 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 208 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 ஆயிரத்து 653 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 60 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 155 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 ஆயிரத்து 644 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 130 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.

Next Story