சங்கரன்கோவில் நகரசபை அலுவலகம் முன் வியாபாரிகள் காத்திருக்கும் போராட்டம்


சங்கரன்கோவில் நகரசபை அலுவலகம் முன் வியாபாரிகள் காத்திருக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2020 3:45 AM IST (Updated: 5 Nov 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் நகரசபை அலுவலகம் முன் வியாபாரிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். நகரசபை முத்திரை இல்லாத ரசீது மூலம் வசூல் செய்வது, வியாபாரிகளை மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சாலையோர வியாபாரிகளுடன் சங்கரன்கோவில் நகரசபை அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், விவசாய அணி செயலாளர் பாலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சங்கரன்கோவில் தாசில்தார் திருமலைச்செல்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், நகரசபை ஆணையாளர் முகைதீன் அப்துல்காதர் உள்ளிட்டவர்கள் வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் சில நாட்களுக்குள் நகராட்சி மண்டல இயக்குனர் மற்றும் ஓ.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். வியாபாரிகள் திடீர் போராட்டத்தால் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story