செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 151 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 151 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 597 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 685 ஆக உயர்ந்தது. 1,014 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 107 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 38 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 ஆயிரத்து 818 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 879 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 626 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்து உள்ளார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 21 வயதுடைய ஆண் மற்றும் சோமங்கலம் பகுதியை சேர்ந்த 21 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 116 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 25 ஆயிரத்து 32 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 399 ஆக உயர்ந்தது. 476 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story