கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டதால் பணிகள் பாதிப்படைந்தன.
பெரம்பலூர்,
கோரிக்கைகளை வலியுறுத்தி யும், மின்வாரிய தலைவரின் தொழிலாளர், பொறியாளர் விரோத போக்கை கண்டித்தும் மாநிலம் தழுவிய மின்வாரிய ஊழியர்களின் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூரில், வட்ட கிளையில் உள்ள மின்வாரிய அனைத்து தொழிற் சங்கங்களை சேர்ந்த ஊழியர்க ளும் நேற்று தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய தொழி லாளர் முன்னேற்ற சங்கத்தின் வட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். தொழி லாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட தலைவர் பழனிவேல், மின்கழக கணக் காளர் களத் தொழிலாளர் சங்கத்தின் வட்ட செயலாளர் சென்னான், பொறியாளர் சங்கத்தின் வட்ட தலைவர் தமிழரசன், சி.ஐ.டி.யு. பொறி யாளர் ஆர்கனைசேஷனின் வட்ட செயலாளர் ரவிச்சந் திரன் ஆகியோர் பேசினர்.
தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது
மின்சார ஊழியர்கள் பலர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து இந்த தர்ணா போராட் டத்தில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு மின்கழக கணக்காயர் களத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி, பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பி னர் ராஜேந்திரன், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மலை யாண்டி, பொறியாளர் சங்கத் தின் வட்ட துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கி பேசினர்.
மின் வட்டங்களில் பணி யாற்றி வரும் ஊழியர், பொறியாளர் அலுவலர்களின் பதவிகளை ஒழிக்கக்கூடாது. துணை மின் நிலையங்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. பதவி உயர்வுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் பறிக்கக் கூடாது. அரசாணை 304-ஐ மின் வாரியத்தில் அமல்படுத்த வேண்டும்.
கோஷங்களை எழுப்பினர்
ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும். சரண்டர் விடுமுறைக்கான தொகையை வழங்கிட வேண் டும். மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககளை நிறைவேற்ற மின்வாரியத்தை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட மின்சார ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர்.
காலை 10 மணிக்கு தொடங் கிய தா்ணா போராட்டம் மாலை 5 மணிக்கு முடி வடைந்தது. முன்னதாக தமிழ் நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயலாளா் அகஸ்டின் நிறைவுரையாற்றி னாா். கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் 763 பேர் நேற்று பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்திருந்ததால், மின்வாரிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதோடு, பணிக ளும் பாதிப்படைந்தன.
Related Tags :
Next Story