காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தர்ணா போராட்டம்
52 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நாகையில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்,
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நாகை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு மின்வாரிய பொறியாளர் சங்க வட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார்.
துணைமின் நிலையங்களை பராமரிப்பதை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். பதவி உயர்வுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் பறிப்பதை கைவிட வேண்டும். உற்பத்தி திட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர் அலுவலர்களின் பதவிகளை ஒழிப்பதை கைவிட வேண்டும்.
52 ஆயிரம் காலிப்பணியிடங்கள்
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதிநேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பாரபட்சம் இன்றி போனஸ் வழங்க வேண்டும். சரண்டர் விடுப்பிற்கான தொகை வழங்க வேண்டும். 52 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story