மனுதர்ம நூலை தடை செய்யக்கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது


மனுதர்ம நூலை தடை செய்யக்கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2020 9:16 AM IST (Updated: 5 Nov 2020 9:16 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் பேரவை சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு, 

மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரவல் காரணமாக பா.ஜனதாவினர் நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக்கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் பேரவை சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் பேரவையினர் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரப்பன்சத்திரம் போலீசார், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கிடையாததால் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் அனுமதியின்றி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 4 பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story