பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது


பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது
x
தினத்தந்தி 5 Nov 2020 9:19 AM IST (Updated: 5 Nov 2020 9:19 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஈரோடு, 

பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் ஈரோடு மாநகர் மத்திய மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் தா.ப.பரமேஸ்வரன், மத்திய மாவட்ட செயலாளர் அ.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு சாரா தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ரவி, பொருளாளர் சி.நாகராஜ், மாநில துணைச்செயலாளர் மேகநாதன், துணைத்தலைவர் எம்.பி.வெங்கடாசலம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை தமிழக முதல்-அமைச்சராக்க முழு மனதோடு செயல்படுவோம். கட்டுமான அமைப்பு சாரா ஆட்டோ நல வாரியம் குறித்து பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்வது.

மாட்டு வண்டி

* ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தப்படும்போது மாட்டு வண்டிகளுக்கு தடை விதிப்பதாக தகவல் பரவுவதால், மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும். மோட்டார் வாகனத்தில் கொண்டு வரும் பொருட்களை ஏற்றி, இறக்க அந்தந்த தொழிலாளர்களுக்கே அனுமதி வழங்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பொ.வை.ஆறுமுகம், தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர் கு.குருசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் பி.டி.ராசு, தொழிற்சங்க செயலாளர் முனியப்பன், மாவட்ட துணைச்செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் சேகர், கோவிந்தசாமி, தமிழ்செல்வன், விக்னேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செல்வம் நன்றி கூறினார்.

Next Story