விழுப்புரத்தில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்
விழுப்புரத்தில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுசார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தொ.மு.ச. மண்டல செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி, ஐக்கிய சங்க மாநில பொருளாளர் சிவக்குமார், சம்மேளன செயலாளர் குப்புசாமி, கணக்காயர் சங்க செயலாளர் கருப்பையா, தொ.மு.ச. மாநில துணைத்தலைவர் தேசிங்கு ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். தொ.மு.ச. பேரவை செயலாளர் ஞானப்பிரகாசம், போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.
உற்பத்தி திட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர், அலுவலர்களின் பதவிகளை ஒழிக்கக்கூடாது, துணை மின் நிலையங்களை பராமரிப்பதை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது, அரசாணை 304-ஐ மின்வாரியத்தில் அமலாக்க வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் சி.ஐ.டி.யு. திட்ட பொருளாளர் அருள், ஐக்கிய சங்க மண்டல செயலாளர் பெரியசாமி, பொறியாளர் சங்க பொருளாளர் ரவீந்திரன், ஜனதா சங்க செயலாளர் மகேஷ், அம்பேத்கர் சங்க செயலாளர் கணேஷ், ஐ.என்.டி.யு.சி. சங்க நிர்வாகி தெய்வநாயகம் உள்பட விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்குட்பட்ட 24 செயற்பொறியாளர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று விடுப்பு எடுத்து பங்கேற்றனர். இந்த போராட்டம் காரணமாக மின்வாரிய பணிகள் முடங்கின. அலுவலகங்களும் குறைந்த ஊழியர்களோடு இயங்கியதால் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

Related Tags :
Next Story