நரிக்குளத்தில் சமுதாய கூடம் சீரமைக்கப்படுமா?
நரிக்குளத்தில் உள்ள சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள வடகரை பஞ்சாயத்தை சேர்ந்தது நரிக்குளம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.5 லட்சம் மதிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு இங்கு சமுதாய கூடம் கட்டப்பட்டது.
இந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், பூப்புனித நீராட்டு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த சமுதாய கூடத்தில் வைத்து தான் நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த சமுதாய கூடம் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
நரிக்குளம் கிராம மக்களின் நலன் கருதி இங்கு சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இங்கு நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த சமுதாய கூடம் சரியான முறையில் பராமரிக்காததால் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதையடுத்து இங்கு நிகழ்ச்சிகளை நடத்துவதை இப்பகுதி மக்கள் தவிர்த்து விட்டனர்.
நாளுக்கு நாள் இந்த சமுதாய கூடம் சேதமடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சமுதாய கூடத்தை முழுவதுமாக சீரமைத்து அனைத்து நவீன வசதிகளுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story