தூத்துக்குடி பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சின்னகண்ணுபுரம் அந்தோணியார் சர்ச் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றவரை மடக்கி பிடித்து சோதனையிட்டார். அவர் சின்னகண்ணுபுரத்தை சேர்ந்த சேர்மத்துரை மகன் செல்வலிங்கம் என்ற செல்வம் (வயது 21) என்பதும், அவர் அங்கு கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, கோரம்பள்ளம் குளக்கரையில், பெரியநாயகிபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் திருமணி (23) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். உடனடியாக போலீசார் திருமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story