கொரோனா பாதிப்பு குறைந்தது: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 49 பேருக்கு தொற்று
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 49 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 15 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது.இதில் 13 ஆயிரத்து 941 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 179 பேர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 873 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 7 ஆயிரத்து 656 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 62 பேர் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 227 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 14 ஆயிரத்து 694 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 131 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story