மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்,
மத்திய அரசை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான முகமது அலி கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து பேசினார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் மசோதாவை எதிர்த்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், திராவிடர் கழகம் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story