மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 246 பேருக்கு கொரோனா 117 பேர் பலி
மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 246 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் நேற்று 117 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் சமீபமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 5 ஆயிரத்து 246 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 3 ஆயிரத்து 444 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 15 லட்சத்து 51 ஆயிரத்து 282 பேர் குணமடைந்து உள்ளனர்.
நேற்று மட்டும் 11 ஆயிரத்து 277 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 519 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் மேலும் 117 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 44 ஆயிரத்து 804 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மும்பை
மும்பையில் புதிதாக 804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் நகரில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 681 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 25 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story