பேரளத்தில் இருந்து மதுரை, விருதுநகருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


பேரளத்தில் இருந்து மதுரை, விருதுநகருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 6 Nov 2020 10:13 AM IST (Updated: 6 Nov 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

பேரளத்தில் இருந்து மதுரை, விருதுநகருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி பேரளத்தில் இருந்து மதுரை மற்றும் விருதுநகருக்கு அரவைக்காக தலா 1,000 டன் வீதம் 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதை முன்னிட்டு திருவாரூர், குடவாசல், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில்கள் நெல் மூட்டைகளுடன் மதுரை மற்றும் விருதுநகருக்கு புறப்பட்டு சென்றது.

Next Story