விலைவாசி உயர்வை கண்டித்து தஞ்சையில், மாதர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்


விலைவாசி உயர்வை கண்டித்து தஞ்சையில், மாதர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2020 10:53 AM IST (Updated: 6 Nov 2020 10:53 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் விலைவாசி உயர்வை கண்டித்தும் வெங்காய மாலை அணிந்து, தட்டில் காய்கறிகளை ஏந்தியும் மாதர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவி கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வசந்தி, மாவட்ட துணை செயலாளர் வசந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வெங்காயம் விலை உயர்வு, மளிகைப் பொருட்கள் விலை அதிகரிப்பு, எரிவாயு மானியம் ரத்து, அத்தியாவசிய பொருட்களின் கட்டுக்கடங்கா விலைவாசி உயர்வால் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாட முடியாத நிலையில் உள்ளதை விளக்கியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

வெங்காய மாலை

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் வெங்காய மாலை அணிந்தும், எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், காய்கறிகளை தட்டில் கொட்டி வைத்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story