கும்மிடிப்பூண்டியில் இருந்து வேல் யாத்திரைக்கு புறப்பட்ட பா.ஜ.க.வினர் 153 பேர் கைது


கும்மிடிப்பூண்டியில் இருந்து வேல் யாத்திரைக்கு புறப்பட்ட பா.ஜ.க.வினர் 153 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2020 3:00 AM IST (Updated: 7 Nov 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் இருந்து வேல் யாத்திரைக்கு புறப்பட்ட பா.ஜ.க.வினர் 153 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருத்தணியில் இருந்து வேல் யாத்திரையை நேற்று தொடங்க போவதாக பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர். தமிழக அரசு வேல்யாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற பா.ஜ.க.வை சேர்ந்த 33 பெண்கள் உள்பட 153 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே பா.ஜ.க.வினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய பா.ஜ.க. துணைத்தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் லோகேஷ், பொதுச்செயலாளர் கேசவன், இளைஞரணி தலைவர் நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

பின்னர் யாத்திரையாக செல்ல முயன்ற சீனிவாசன், ராஜேஷ் உள்பட 118 பேரை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story