தூத்துக்குடியில் சிறப்பு தேர்தல் பொதுக்கூட்டம்: கனிமொழி எம்.பி. உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்கு


தூத்துக்குடியில் சிறப்பு தேர்தல் பொதுக்கூட்டம்: கனிமொழி எம்.பி. உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Nov 2020 3:30 AM IST (Updated: 7 Nov 2020 11:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சிறப்பு தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கனிமொழி எம்.பி. உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

‘தமிழகம் மீட்போம்‘ என்ற பெயரில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் காணொலி காட்சி மூலம் தி.மு.க.வினருடன் சிறப்பு தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். கடந்த 5-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் காணொலி மூலம் நடந்தது.

அன்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காணொலி காட்சி மூலம் சிறப்பு தேர்தல் பொதுக்கூட்டம் நடந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கனிமொழி எம்.பி., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, சண்முகையா எம்.எல்.ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் உள்பட 3 ஆயிரத்து 84 பேர் மீது தூத்துக்குடி சிப்காட் மற்றும் புதியம்புத்தூர் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதாவது இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் (143 பிரிவு), தொற்று நோய் பரவும் விதம், கவனக்குறைவாக நடத்தல் (269, 270, 271), தடை உத்தரவை மீறுதல் (189), தொற்றுநோய் பரவல் தடை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story