சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வளர்ச்சி திட்டங்கள் - ஆதித்ய தாக்கரே உறுதி


சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வளர்ச்சி திட்டங்கள் - ஆதித்ய தாக்கரே உறுதி
x
தினத்தந்தி 8 Nov 2020 4:00 AM IST (Updated: 8 Nov 2020 6:33 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

நாசிக் மாவட்டத்தில் உள்ள அஞ்சனேரி மலைப்பகுதி கடவுள் அனுமனின் பிறப்பிடம் என நம்பப்படுகிறது. இந்த பகுதி உள்பட மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மகாவிகாஸ் அகாடி அரசாங்கம் நிலையான வளர்ச்சி திட்டங்களை தான் மேற்கொண்டு வருகிறது. அஞ்சனேரியின் சுற்றுச்சூழல் தன்மை குறித்து ஹேமந்த் கோட்சே எம்.பி.யிடம் பேசினேன். ‘சிரோபிஜியா அஞ்சனேரிகா’ என்ற தாவரம் உலகிலேயே அங்கு மட்டும் தான் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பிரச்சினை ஏற்படுத்தாத, நிலையான, இயற்கையுடன் இணைந்த வளர்ச்சி திட்டப்பணிகள் தான் மாநிலத்துக்கு ஊக்கத்தை அளிக்கும். அந்த பகுதியில் புனிததன்மையை காத்து பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க விரிவான திட்டத்தை உருவாக்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story